LOG IN

அரசு தோட்டக்கலை பண்ணைகள் (67 Nos) / பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் (17 Nos)

அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் 1950 ஆண்டு முதல் நிறுவப்பட்டது. தோட்டக்கலைத்துறை மறு சீரமைப்புக்கு பின் (2008) டான்ஹோடா என்ற முகமை ஏற்படுத்தப்பட்டு அதன் கீழ் அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் செம்மையாக செயல்பட்டு வருகின்றன.

அரசுப் பண்ணைகளின் நோக்கம் :

  • தரமான மற்றும் வம்சாவளி தோட்டக்கலை நடவுப் பொருட்கள் விவசாயிகளின் தேவைகளுக்கேற்ப உற்பத்தி செய்தல்.
  • விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்ப முறை செயல் விளக்க மையம்.
  • ஒவ்வொரு வருடமும் 200 இலட்சம் நடவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வலைதளத்தின் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான தோட்டக்கலை நடவுப் பொருட்கள் கிடைக்குமிடம், அதன் எண்ணிக்கை மற்றும் பண்ணை மேலாளர்கள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.